கத்துவா சிறுமி கொல்லப்பட்ட வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள்

நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கத்துவா சிறுமி கொல்லப்பட்ட வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள்
x
காஷ்மீரில் உள்ள கத்துவா கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் கிராமத்தின் தலைவர் சஞ்சி ராம், அவரின் மகன் விஷால், சஞ்சி ராமின் நண்பர்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்க முயன்ற 3 காவலர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு தொடரப்படவில்லை. இதையடுத்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பதான்கோட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. ஒரு வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், 6 பேரை குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில்,  சஞ்சி ராமின் மகன் விஷால், சம்பவம் நடந்த நேரத்தில் தான் பள்ளியில் தேர்வெழுதி கொண்டிருந்ததாக கூறி அளித்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவனை விடுவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்