மார்க்சிஸ்ட்டிலிருந்து விலகியவருக்கு அரிவாளால் வெட்டு - 5 பேர் கைது

மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாக வடகரை தொகுதியில் போட்டியிட்ட நசீர் என்பவரை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டி இருசக்கர வாகனத்தை அவர் மீது ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மார்க்சிஸ்ட்டிலிருந்து விலகியவருக்கு அரிவாளால் வெட்டு - 5 பேர் கைது
x
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாக வடகரை தொகுதியில் போட்டியிட்ட நசீர் என்பவரை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டி, இருசக்கர வாகனத்தை அவர் மீது ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் நசீரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். நசீரை மர்ம கும்பல் தாக்கிய காட்சிகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் நிலையில், தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்