மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி
முதலமைச்சர்  நாராயணசாமி தெரிவித்துள்ளார். நேருவின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மாநில அரசின் நலன் கருதி மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.மின் கட்டணத்தை குறைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, குழு கொடுக்கும் அறிக்கையின் படி விரைந்து மின்கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்