பெங்களூருவுக்கு தாமதமாக ரயில் வந்ததால் 600 மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை : மீண்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை

பெங்களூருவில், ரயில் தாமதமாக வந்த காரணத்தால், 600 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பெங்களூருவுக்கு தாமதமாக ரயில் வந்ததால் 600 மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை : மீண்டும் வாய்ப்பு வழங்க  கோரிக்கை
x
பெங்களூருவில், ரயில் தாமதமாக வந்த காரணத்தால், 600 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
பெல்லாரி மாவட்டத்தில் இருந்து 4 மணி நேரம் தாமதமாக நேற்று முன் தினம் புறப்பட்ட ஹம்பி ரயில், நடுவழியில் சிக்னல் காரணமாக நிறுத்தப்பட்டு மொத்தமாக 7 மணி தாமதத்திற்கு பின், அடுத்த நாள் மதியம் 1 மணி அளவில் தான் பெங்களூரு வந்தடைந்துள்ளது. இதனால், ரயிலில் பயணம் செய்த 600 மாணவர்களும், நீட் தேர்வு எழுத முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்