செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு : முதன் முறையாக பதிவு செய்தது இன்சைட்

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நில அதிர்வை முதன்முறையாக பதிவு செய்து, நாசாவின் இன்சைட் விண்கலம் சாதனை படைத்துள்ளது
செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு : முதன் முறையாக பதிவு செய்தது இன்சைட்
x
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நில அதிர்வை முதன்முறையாக பதிவு செய்து, நாசாவின் இன்சைட் விண்கலம்  சாதனை படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இன்சைட்  விண்கலம், அங்குள்ள நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த  வகையில் கடந்த 6ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நில அதிர்வை அது 
பதிவு செய்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, வளி மண்டலத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளே அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தான் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நில அதிர்வு முதன்முறையாக உணரப்பட்டதாகவும் நாசா 
தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 2 முதல் 2.5-ஆக நில அதிர்வு பதிவாகயிருந்ததாகவும், தொடர்ந்து 10 நிமிடத்துக்கு அந்த நில அதிர்ச்சி நீடித்ததாகவும் தெரியவந்துள்ளது.  இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து  ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்