சந்திராயன் 2 திட்டம் ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன் 2 திட்டத்தை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
சந்திராயன் 2 திட்டம் ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு
x
சந்திராயன் 2 திட்டத்தை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை இம்மாதம் செலுத்த இஸ்ரோ முடிவு செய்திருந்தது. இந்நிலையில் நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலின் பெர்ஷித் விண்கலம் வெடித்து சிதறியதால், சந்திராயன் 2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து கூறியுள்ள இஸ்ரோ மூத்த அதிகாரி, தொழில்நுட்ப ரீதியாக அதிகம் மேம்படுத்தப்பட்ட பெர்ஷித் விண்கலம் தோல்வியடைந்ததால், நமது திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்