மத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்

ஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்
x
ஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் அமைய உள்ள புதிய அரசு, இந்த முதல் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்ட அமெரிக்கா, கடந்த நவம்பர் மாதம் முதல் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் இந்த பொருளாதார தடைகளை அமல்படுத்த 180 நாட்கள் அமெரிக்கா விலக்கு அளித்தது.
இந்த 6 மாத கால தடை வருகிற மே மாதம் 2ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு பிறகு, ஈரானில் இருந்து இந்தியா கச்சா 

எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உலகிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் 3-வது பெரிய நாடான இந்தியா, ஈரானிடம் இருந்து தினமும் 4 லட்சத்து 52 ஆயிரம் பீப்பாய்களை இறக்குமதி செய்கிறது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. உத்தரவாதமான வினியோகம், விலையும் குறைவு, சரக்குகட்டணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 60 நாள் காலஅவகாசத்தில் கச்சா எண்ணெய்க்கான கட்டணத்தை கொடுத்துவிட முடியும். 

அதுமட்டுமின்றி, மொத்த எண்ணெய் விலையில் 45 சதவீதத்தை இந்திய ரூபாயிலும், மீதி தொகையை யூரோவிலும் கொடுத்துவிடலாம். 

தற்போது அனுபவித்து வரும் இது போன்ற பல சலுகைகளை இந்தியா இழக்கநேரிடும். இந்தத்தடையை சமாளிக்க மற்ற நாடுகளில் இருந்து, அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கும். இந்திய பணமதிப்பு குறையும். சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து, அதன்காரணமாக விலைவாசியும் உயரும் அபாயம் இருக்கிறது. அடுத்து அமையும் மத்திய அரசிற்கு இதையெல்லாம் சமாளிக்கவேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது




Next Story

மேலும் செய்திகள்