தெலுங்கானாவில் மண் சரிவு - 11 பேர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் மண் சரிவு ஏற்பட்டு கூலி தொழிலாளர்கள் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
அங்குள்ள மகபூப் நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளும் பணியில் தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் சிக்கினர்.  மீட்புப்பணியில் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்