காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஊர்மிளா மடோன்கர் - பூங்கொத்துடன் வரவேற்ற காங்.தலைவர் ராகுல்காந்தி

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஊர்மிளா மடோன்கர் - பூங்கொத்துடன் வரவேற்ற காங்.தலைவர் ராகுல்காந்தி
x
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஊர்மிளா பொதுவாழ்வில் ஈடுபட்டு சேவை செய்ய வேண்டும் என்பதே தமது எண்ணம் என கூறினார். இதற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கப்போவதாகவும் ஊர்மிளா தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு தற்போது அந்த எண்ணம் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்