அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
அயோத்தி விவகாரம் தொடர்பாக வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்தர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் பைஷாபாத்தில் விசாரணை நடைபெறும் என்றும், இவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான விவரங்களை வெளியிட பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அயோத்தி விவகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - அர்ஜுன் சம்பத் கருத்து


அயோத்தி விவகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு -  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து


அயோத்தி விவகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - ஜவாஹிருல்லா கருத்து 



Next Story

மேலும் செய்திகள்