இந்தியா முழுவதும் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்...

மஹா சிவராத்திரி விழா இந்தியா முழுவதும் சிவாலயங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தியா முழுவதும் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்...
x
மஹா சிவராத்திரி விழா இந்தியா முழுவதும் சிவாலயங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விடிய, விடிய கண்விழித்து பக்தி பரவசத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள், சிவபெருமானை வழிபட்டனர். 

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மக்கள், இரவு முழுவதும் கண்விழித்து  சாமி தரிசனம் செய்தனர். 

தஞ்சை பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெருவுடையாருக்கு  4 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் சிவனை வழிபட்டனர் .

திருச்சி  திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் தேவராம் , திருவாசகம் பாடி பக்தர்கள் மகா சிவராத்திரியை கொண்டாடினர்.

திருப்பூர் நவகிரக்கோட்டையில் சிறப்பு வேள்வி வழிபாடு நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாமல்லபுரம்  மல்லிகேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் வெளிநாட்டு பயணிகள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர் .

தூத்துக்குடி,நெல்லை கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் சிவனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

மகா சிவராத்திரியையொட்டி,  சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் விடிய, விடிய நாட்டியாஞ்சலி நடைபெற்றது . இதேபோல் ஒசூர்
கல்யாண காமாட்சி அம்மன் கோயிலிலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அரசியல் பிரமுகர்கள்,  நடிகர் நடிகைகள் என பலதரப்பினரும் இரவு முழுவதும் விழித்திருந்து  நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்..  விடிய விடிய ஆடல், பாடல்கள், பக்தி நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என ஈஷா மையம் களைகட்டியது..

கலைஞர்கள் நெருப்பில் செய்த  வீரதீர சாகச நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.. அவ்வப்போது ஜக்கி வாசுதேவும்  ஆடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார்..

பெங்களூரு : ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்

பெங்களூருவில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ஆட்டம், பாட்டு என விழா களைகட்டியுள்ளது.   









Next Story

மேலும் செய்திகள்