6 மாத பச்சிளம் குழந்தை கொலை - தண்ணீர் தொட்டிக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 6 மாத பச்சிளம் குழந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 மாத பச்சிளம் குழந்தை கொலை - தண்ணீர் தொட்டிக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 6 மாத பச்சிளம் குழந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர் புரத்தை சேர்ந்த வினோத் - புவனேஷ்வரி தம்பதியரின்,  தங்களது 6 மாத குழந்தையை   வீட்டிற்குள் தூங்க வைத்துவிட்டு பின்புறம் வேலை பார்த்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில் வீட்டிற்குள் நுழைந்த சில மர்ம நபர்கள் 6 மாத குழந்தையை கொன்று வீட்டின் எதிரே உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குழந்தை இறந்த நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஆர் புரம் போலீசார் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்