உத்தரபிரதேசம் செல்கிறார், பிரியங்கா காந்தி

கட்சி பொறுப்பேற்ற பிறகு, உத்தர பிரதேசத்துக்கு பிரியங்கா காந்தி வதேரா இன்று செல்கிறார்
உத்தரபிரதேசம் செல்கிறார், பிரியங்கா காந்தி
x
காங்கிரஸ் கட்சியில், உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக லக்னோ செல்லும் பிரியங்காவுக்கு, பலத்த வரவேற்பு அளிக்க, மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு பிராந்திய பொதுச் செயலர், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும், அவருடன் இன்று செல்கின்றனர். 3 பேரையும் விமான நிலையத்தில் இருந்து தலைமை அலுவலகம் வரை சாலை வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வரும், 14ம் தேதி வரை, உத்தரபிரதேசத்தில்தங்கி 
இருக்கும் பிரியங்கா, அங்குள்ள 42 நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளா​ர்.

Next Story

மேலும் செய்திகள்