பிப்ரவரி 11-ல் ஆஜராக டுவிட்டர் அதிகாரிகள் மறுப்பு...

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கலந்து பேசி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என எம்.பி. அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 11-ல் ஆஜராக டுவிட்டர் அதிகாரிகள் மறுப்பு...
x
சமூக வலைதளங்களில் குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பாக, டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் நாடாளுமன்ற தகவல் தொழில் நுட்பக் குழு முன்பு பிப்ரவரி 7 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டது. அந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், குறுகிய கால இடைவெளி உள்ளதால், நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு, பிப்ரவரி 11 ஆம் தேதி ஆஜராக இயலாது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த, தகவல் தொழில் நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான அனுராக் தாக்கூர், திங்கள்கிழமை இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்