அருணாச்சல பிரதேசம் எங்கள் நாட்டின் ஒருபகுதி - இந்தியா பதிலடி

அருணாச்சல பிரதேசத்துக்கு மோடி சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் எங்கள் நாட்டின் ஒருபகுதி - இந்தியா பதிலடி
x
அருணாச்சல பிரதேசத்துக்கு மோடி சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு, இந்தியா பதிலடி அளித்துள்ளது.  வடகிழக்கு மாநிலங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேசத்தில் பல நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்துக்கு மோடி சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் என்ற ஒன்றையே சீனா அங்கீகரிக்கவில்லை என்றும் இருநாட்டு எல்லை பிரச்னையை அதிகப்படுத்தும் முயற்சியை இந்திய தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சீனா தெரிவித்திருந்தது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், இதுகுறித்து சீனாவுக்கு பல முறை அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்