இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்...

மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்...
x
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில், இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை பொறுப்பை வகித்து வரும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், 2019 -2020 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  இதனிடையே இந்த கூட்டத் தொடரில், மத்திய அரசுக்கு எதிராக பல முக்கிய பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள் 

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு  தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரவித்துள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகளை, மக்கள்  உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள மோடி, எம்.பி.க்கள் அனைவரும் அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்றும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்