புதுச்சேரி மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

9,59,566 வாக்காளர்கள் உள்ளதாக தகவல்
புதுச்சேரி மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
புதுச்சேரி மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார். புதுச்சேரி மாநிலத்தில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 153 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 6 ஆயிரத்து 320 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 93 பேர் என மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்