"காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள்" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அதிருப்தி

கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தி தாம் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அதிருப்தி
x
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரின் செயல்பாடுகளால் குமாரசாமி அதிருப்தி அடைந்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டத்தில் பேசிய அவர்,  காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை நீண்ட நாள் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார். கர்நாடகாவில் உள்ள ஆறரை கோடிமக்கள் தன்னை நம்ப வேண்டும் என்றும், மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி முதலமைச்சர் பதவியில் தாம் நீடிக்க விரும்பவில்லை என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்