ஜார்ஜ் பெர்னாண்டஸ் அரசியலில் கடந்து வந்த பாதை

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், அரசியலில் கடந்து வந்த பாதை
ஜார்ஜ் பெர்னாண்டஸ் அரசியலில் கடந்து வந்த பாதை
x
* 1967ஆம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

* எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு இருந்த படியே 1977ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

* 1977 முதல் 1979ஆம் ஆண்டு வரை தகவல் தொடர்புத் துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

* 1989 முதல் 1990ஆம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பணியாற்றிய போது கொங்கன் ரயில்வே அமைய காரணமாக இவர் இருந்தார்.

* 1998, 1999, 2001 என மூன்று முறை  பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றவர்.

* இவர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தான், கார்கில் போர் மற்றும் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

* 1967, 1977, 1980, 1989, 1991, 1996, 1999, உள்பட மொத்தம் 9 தேர்தல்களில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர்.

* 2009ஆம் ஆண்டில் பீகாரிலிருந்து மாநிலங்களைவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்