"தேச பாதுகாப்புக்காக பல முக்கிய முடிவுகள்" - தேசிய மாணவர் படை நிகழ்ச்சியில் மோடி பேச்சு

பாஜகவின் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் , தேச பாதுகாப்பிற்காக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேச பாதுகாப்புக்காக பல முக்கிய முடிவுகள் - தேசிய மாணவர் படை நிகழ்ச்சியில் மோடி பேச்சு
x
டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை கூட்டத்தில் பேசிய அவர், அணுசக்தி முனையத்தை உருவாக்கிய வெகு சில நாடுகளில் தற்போது இந்தியாவும் உள்ளதாக தெரிவித்தார். தேசம் பாதுகாப்புடன் இருந்தால்தான், இளைஞர்கள் தங்களது கனவுகளை நனவாக்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்தியா அமைதிக்கான ஆதரவாளராக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பிற்காக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள தயங்காது என்றும் அவர் கூறினார்.   கேரள  நிவாரண பணிகளில் தேசிய மாணவர் படையினர் பங்கு  பாராட்டுக்குரியது என்றும் மோடி குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்