சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா, பிந்துவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜனவரி 18, 2019, 02:56 PM
சபரிமலையில், 50 வயதுக்கு உட்பட்ட 51 பெண்கள் சாமி தரிசனம் செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ஜனவரி 2 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு கனக துர்கா மற்றும் பிந்து என்ற இரு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கு சிலர் தொடர் மிரட்டல் விடுத்து வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் இருந்து 24 பெண்கள், ஆந்திராவில் இருந்து 21 பெண்கள், தெலங்கானாவில் இருந்து 3 பெண்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஒரு பெண்ணும், யூனியன் பிரதேசங்களான கோவா, புதுச்சேரியிலிருந்து தலா ஒரு பெண் என மொத்தம் 51 பேர் சபரிமலையில் தரிசனம் செய்திருப்பதாக கேரள அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து, கனக துர்கா மற்றும் பிந்துவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3926 views

பிற செய்திகள்

அரசின் பசுமை வீட்டில் இயங்கிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

அரசின் பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

93 views

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலைமறியல்

கடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

42 views

அழகம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.

12 views

அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

672 views

முகிலனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு

காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.