3 நாள் பயணமாக இந்தியா வந்தார் மாலத்தீவு அதிபர்...

மாலத்தீவு அதிபராக பதவி ஏற்றபின் இப்ராகீம் முகமது சோலியின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார்.
3 நாள் பயணமாக  இந்தியா வந்தார் மாலத்தீவு அதிபர்...
x
மாலத்தீவு அதிபராக இப்ராகீம் முகமது சோலி கடந்த மாதம் 17-ஆம் தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அவரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து 3 நாள் அரசு முறைப் பயணமாக மாலத்தீவு அதிபர் டெல்லி வந்துள்ளார். மாலத்தீவு அதிபராக பதவி ஏற்றபின் இப்ராகீம் முகமது சோலியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை முகமது சோலி இன்று சந்தித்து பேச உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்