ரபேல் ஒப்பந்த முறைகேடு : விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி...

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணையே தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
x
ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பான 5 பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வழக்கை கையாண்டதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வணிகரீதியாக சலுகை அளிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் தீர்ப்பாயம் போன்று இந்த விவகாரத்தில் அனைத்து கோணங்களையும் பார்க்க விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். ரஃபேல் கொள்முதல் நடைமுறை திருப்தியாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்