மத்திய பிரதேசத்தில் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.
x
மத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் இறுதி நிலவரம்,  இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் உள்ள 230 இடங்களில் 114 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. பாஜகவுக்கு 109 இடங்களும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் ஒரு இடத்தில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஏற்கனவே, பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் பெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், தற்போது காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 3 பேரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் ஆதரவாளர்கள். இதையடுத்து, 117 பேரின் ஆதரவோடு, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. 109இடங்களுடன் நூலிழையில் ஆட்சியை பறிகொடுத்த பா.ஜ.க., மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அமருகிறது. 



Next Story

மேலும் செய்திகள்