ராணுவ வீரர்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படும் - புதிய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி
பதிவு : டிசம்பர் 02, 2018, 03:44 PM
ராணுவ வீரர்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படும் - புதிய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி
நியாயமான, பாரபட்சமற்ற தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வோம் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். பதவியேற்றதும் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தேர்தலில் தங்களின் வாக்குகளை செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்போவதாக தெரிவித்தார். தேர்தல் நடைமுறைகளில், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை விரும்புவதாகவும் சுனில் அரோரா கூறினார். துணை தலைமை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் இறுதியில், இந்த கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.