'ஜப்பான், அமெரிக்கா, இந்தியா என்பதன் சுருக்கம் வெற்றி' - மோடி

அர்ஜென்டினாவில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா, துருக்கி, நெதர்லாந்து, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.
ஜப்பான், அமெரிக்கா, இந்தியா என்பதன் சுருக்கம் வெற்றி - மோடி
x
ஜி 20 மாநாட்டின் ஒரு அங்கமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே ஆகியோரை மோடி சந்தித்து பேசினார். மூன்று தலைவர்களின் சந்திப்பின்போது, மூன்று நாடுகளுக்கு இடையிலான நட்புறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 'ஜப்பான், அமெரிக்கா, இந்தியா என்பதன் சுருக்கமே வெற்றி' என மோடி குறிப்பிட்டார். அமெரிக்க, ஜப்பான் தலைவர்கள் தனது நல்ல நண்பர்கள் எனவும் மோடி தெரிவித்தார். 

இதுபோல, சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட டிரம்ப், தங்களுக்குள்ளான நட்புறவு மிக வலிமையானது எனவும் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் மூன்று நாடுகளும் ஒற்றுமையாக உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்