விண்ணில் செலுத்தப்பட்டது 'பி.எஸ்.எல்.வி சி-43' ராக்கெட்

புவியைக் கண்காணிக்கும் பிரத்யேக செயற்கைக் கோளுடன், பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்
x
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 9.57 மணிக்கு பிஎஸ்.எல்.வி சி-43 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் மூலம் விண்வெளியிலிருந்து பூமியை கண்காணித்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் 'ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்' கொண்ட 'HYIS என்ற செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது. கடல் வளம், மண்வளம் உள்ளிட்டவற்றை அறியவும், உளவுப் பணிகளுக்காகவும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளை சேர்ந்த 30 மிகச்சிறிய செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன.




"ராணுவ உளவுப் பணிக்கு உதவும்" - ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கருத்து 

வனப்பகுதி, கடலோர பகுதி, முக்கியமான ராணுவ உளவுப் பணிக்கு இந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்  உதவும் என ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்