காஷ்மீர் சட்டசபை திடீர் கலைப்பு : ஆளுநர் சத்யபால் மாலிக் நடவடிக்கை

காஷ்மீர் சட்டப்பேரவையை கலைத்து, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் சட்டசபை திடீர் கலைப்பு : ஆளுநர் சத்யபால் மாலிக் நடவடிக்கை
x
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம்   பா.ஜ.க, ஆதரவை திரும்ப பெற்றதை அடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.இதை தொடர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி பி.டி. பி. கட்சியின் மெகபூபா முஃப்தி, ஆளுநர் சத்யபால் மாலிக்-குக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், அம்மாநில சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் மாலிக் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்