விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-29 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு

ஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-29 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
x
ஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது  இரட்டிப்பு வெற்றி என்றும், இந்திய மண்ணில் இருந்து இதுவரை இல்லாத வகையில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த செயற்கைக் கோள், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும்  இணையதள சேவையை வழங்கும் என்றும் தமது வாழ்த்து செய்தியில் பிரதமர்  கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்