மோடி, வாஜ்பாய் உருவம் பொறித்த டாலர்கள் : விற்பனை அமோகம்...

சூரத்தில் உள்ள நகைக் கடையில், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் உருவம் பொறித்த டாலர்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
மோடி, வாஜ்பாய் உருவம் பொறித்த டாலர்கள் : விற்பனை அமோகம்...
x
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நகைக் கடையில், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் உருவம் பொறித்த டாலர்கள் விற்பனை, களை கட்டியுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளிக்கென இங்கு இந்துக் கடவுள்கள் ல‌ஷ்மி, கணேஷ் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்