காப்பி தோட்டத்தில் சிறுத்தை குட்டிகள் கண்டெடுப்பு - தாய் சிறுத்தை குறித்து அச்சம்?

கர்நாடகாவில் உள்ள காப்பி தோட்டத்தில், பிறந்து சில நாட்களேயான இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
காப்பி தோட்டத்தில் சிறுத்தை குட்டிகள் கண்டெடுப்பு - தாய் சிறுத்தை குறித்து அச்சம்?
x
கர்நாடகாவில் உள்ள காப்பி தோட்டத்தில், பிறந்து சில நாட்களேயான இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹொங்கதாலா கிராமத்தில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் காபி  தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூனை குட்டிகள் என்று நினைத்து கையில் எடுத்த போது, அவை சிறுத்தை குட்டிகள் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுத்தை குட்டிகள் பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், குட்டிகளை தேடி தாய் சிறுத்தை தோட்டத்திற்கு வந்துவிடுமோ என்று ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்