அமெரிக்கா - சீனா வர்த்தக போரினால் பலன் அடையும் இந்தியா

சீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்துள்ளதால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா - சீனா வர்த்தக போரினால் பலன் அடையும் இந்தியா
x
சீனாவில் இருந்து விலை மலிவான பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உற்பத்தி துறையில் வேலையிழப்பு ஏற்படுவதாக கருதிய அமெரிக்கா சீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 7 ஆயிரம் சீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதனால் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீன ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.சீனப் பொருட்களின் விற்பனை விலை அதிகரித்தால், அது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்  விளைவாக சுமார் 63 ஆயிரத்து 710 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவிற்கு புதிய ஏற்றுமதி ஆர்டர்கள், அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் என்று கருதப்படுகிறது.இரும்பு, தாமிரம், பிளாஸ்டிக் பொருட்கள்,தோல் பொருட்கள், செயற்கை இழைகள், நூல், ஜவுளி, மரச்சாமான்கள், இறால் மீன் போன்ற பண்டங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்