2- வது நாளாக சபரிமலையில் கொந்தளிப்பு : கோவிலுக்கு சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்

புகழ்பெற்ற சபரிமலை - அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு விட்டதால், கேரளாவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
2- வது நாளாக சபரிமலையில் கொந்தளிப்பு : கோவிலுக்கு சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்
x
புகழ்பெற்ற சபரிமலை - அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு விட்டதால், கேரளாவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2 -வது நாளாக  நேற்றும் கொந்தளிப்பு நிலவியது. கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள், நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சபரிமலை விவகாரம் : சீராய்வு மனு தாக்கல் 

இதனிடையே, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பிராமணர்கள் சங்கம் சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலையில், பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. விரைவில், இந்த சீராய்வு மனு, விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு தயார் : தேவசம் போர்டு அறிவிப்பு

இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயார் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதேநேரம், சபரிமலை விவகாரத்தில், தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு வலுத்துள்ளதால்,  கேரள அரசு, இந்த முடிவுக்கு வந்துள்ளது. வரும் 22 ம் தேதி வரை, அய்யப்பன் கோவில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்