பல தடைகளை தாண்டி சபரிமலைக்கு சென்ற முதல் பெண்

சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக 40 வயதுடைய பெண் ஒருவர் ஐயப்பனை தரிசிக்க சென்றுள்ளார்.
பல தடைகளை தாண்டி சபரிமலைக்கு சென்ற முதல் பெண்
x
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர். ஆண்கள் மட்டுமே செல்லும் ஒரு இடமாக சபரிமலை இருந்து வந்தது. இந்த நிலையில் அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதற்கு கேரள பெண்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது. ஆனால் கேரளாவை சேர்ந்த ஒரு பெண் நேற்று சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினார். இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை கோயிலின் நடை, இன்று மாலை திறக்கப்படுகிறது. இதையடுத்து ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாதவி என்ற பெண் தன் இரு குழந்தைகளுடன் சபரிமலைக்கு சென்றார். பம்பையில் இருந்து சபரிமலைக்கு வந்த மாதவிக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்தனர். நிலக்கல் பகுதிக்கு வந்த அவருக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் போலீசார் அவர்களை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்ற மாதவி, ஐயப்பனை தரிசிக்க எதிர்ப்பு வலுத்தது. தனக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அவர் ஐயப்பனை தரிசிக்காமல் மீண்டும் திரும்பி வந்தார். இருந்த போதிலும் பல கட்ட எதிர்ப்புகளையும் தாண்டி சபரிமலைக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மாதவி... 


Next Story

மேலும் செய்திகள்