2 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை - 9 கிலோ தங்கம், ரூ.5.25 கோடி ரொக்கம் பறிமுதல்

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் நடந்த சோதனையில் 9 கிலோ தங்கம் மற்றும் ஐந்தே கால் கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை - 9 கிலோ தங்கம், ரூ.5.25 கோடி ரொக்கம் பறிமுதல்
x
கர்நாடக தொழில் வளர்ச்சி வாரிய தலைமை அதிகாரி சுவாமி மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆணைய பொறியாளர் கவுடய்யா ஆகியோரின் வீடுகள், அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். பெங்களூருவில் மல்லேசுவரம், பசவேசுவரா நகர் மற்றும் தும்கூரு உட்பட 8 இடங்களில் சோதனை நடைபெற்றது. நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு வரை நீடித்த சோதனையின்போது, இருவரும் வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது தெரியவந்தது. அதிகாரி சுவாமி வீட்டில் இருந்து நான்கரை கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம், 3 சொகுசு கார்கள் சிக்கியதாகவும், அவரது குடும்பத்தினர் பெயரில் 8 வீடுகள், 10 வீட்டு மனைகள், 10 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் ஊழல் தடுப்புபடை ஐ.ஜி. சந்திரசேகர் தெரிவித்தார். இதுபோல, அதிகாரி கவுடய்யா வீட்டில் இருந்து 75 லட்ச ரூபாய் பணம், ஏழரை கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றம் 3 சொகுசு கார்கள் சிக்கியதாகவும் அவருக்கு 2 வீடுகள், 8 வீட்டுமனைகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் 14 பிளாட்டுகள் இருப்பதாகவும் கூறினார். இரண்டு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்