எஸ்- 400 ஏவுகணை கொள்முதல் தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு : இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
எஸ்- 400 ஏவுகணை கொள்முதல் தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
x
டெல்லியில் நடைபெறும் இந்தியா- ரஷ்யா 19 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் பிரதமர்  மோடியை புதின் சந்தித்து பேசினார். ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் போது இருதரப்பு உறவு, உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் இரு நாடுகள் இடையே ரயில்வே, விண்வெளி, பாதுகாப்பு  உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுதாகின. ரஷ்யாவிடம் இருந்து சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எஸ் 400 டிரையம்ப் வகை 5 ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பதமும் கையெழுத்தானது.  400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை அடையாளம் காணும் இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் 36 இடங்களில் தாக்கும் வல்லமை கொண்டது. 

தீவிரவாதம் - சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட முடிவு

இதைத்தொடர்ந்து இரு நாட்டு  தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இரு நாடுகள் இடையே நீண்ட கால நட்புறவு உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வளர்ச்சியில் ரஷ்யா தொடர்ந்து பங்கேற்று வருவதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவதென உறுதி மேற்கொண்டுள்ளதாகவும் மோடி கூறினார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத்துடன், புதின் சந்திப்பு



2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்