சபரிமலை கூட்ட நெரிசலை சமாளிக்க திட்டம் - நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

ஐயப்பனை தரிசிக்க, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சபரிமலை கூட்ட நெரிசலை சமாளிக்க திட்டம் - நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
x
பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், ஐயப்பனை தரிசிக்க, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திகை மாதம் பிறந்ததும் நவம்பர் 16 முதல் சபரிமலையில் நடை திறக்கப்படும். மொத்தம் 42 நாட்கள், பக்தர்கள், லட்சக்கணக்கில், சபரிமலையில் குவிவது வழக்கம். பெண்களுக்கு சன்னிதானத்தில் தனி வரிசை அமைப்பது இயலாத காரியம் என தெரிவித்துள்ள தேவசம் போர்டு,  ஆன் லைன் மூலம் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இதுதவிர, நிலக்கல் பகுதியில் 10 ஆயிரம் பெண்கள் தங்குவதற்கு, ஒய்வறை கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்