சாலை விபத்துகளில் இறக்கும் பாதசாரிகள் - இந்திய அளவில் தமிழகம் முதலிடம்...

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சாலை விபத்துகளில் இறக்கும் பாதசாரிகள் - இந்திய அளவில் தமிழகம் முதலிடம்...
x
சாலை விபத்துகளில் இறந்த பாதசாரிகள் பற்றிய புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரத்து 330 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த  ஆண்டில் மட்டும் 20 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டு மட்டும் தினமும் 56 பாதசாரிகள், சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு, இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து, மகாராஷ்டிராவில்  ஆயிரத்து 831 பேரும், ஆந்திராவில் ஆயிரத்து 379 பேரும் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 6 ஆயிரத்து 329 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 699 ஆகவும், மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 659 ஆகவும் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்