தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நாளையுடன் ஓய்வு

நாளையுடன் பணி ஓய்வுபெற உள்ள அவருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சக நீதிபதிகள் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நாளையுடன் ஓய்வு
x
மனிதனின் வரலாற்றை கொண்டு தாம் தீர்ப்பு வழங்குவதில்லை என்றும், அவர்களது நடவடிக்கைகளை பொறுத்தே தமது தீர்ப்பு அமையும் என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 
நாளையுடன் பணி ஓய்வுபெற உள்ள அவருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சக நீதிபதிகள் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய தீபக் மிஸ்ரா, உலகிலேயே மிகவும் வலுவான, வலிமையான அமைப்பு இந்திய நீதித்துறைதான் என்றார். இதே விழாவில் பேசிய, புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள ரஞ்சன் கோகோய், தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகள் எதிர்காலத்திலும் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்