காரை நிறுத்தாமல் சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு

உத்தர பிரதேச மாநிலத்தில், காரை நிறுத்தாமல் சென்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
காரை நிறுத்தாமல் சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு
x
லக்னோவில், விவேக் திவாரி என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் சென்றுகொண்டிருந்த காரை போலீசார் தடுத்துள்ளனர். 
ஆனால், காரை நிறுத்தாததால், பிரசாந்த் சவுத்ரி என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த விவேக், மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இரு காவலர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, விவேக் திவாரி, தன் மீது காரை ஏற்ற முயன்றதால் தற்காப்பிற்காக மட்டுமே துப்பாக்கியால் சுட்டதாக காவலர் பிரசாந்த் கூறியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயிரிழந்த விவேக்கின் மனைவி கல்பனா கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்