நண்பனின் தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற நபர் - தாயை அவதூறாக பேசியதால் வெறிச்செயல்

தாயை அவதூறான வார்த்தைகளால் திட்டிய நண்பனின் தலையை வெட்டி கொன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
நண்பனின் தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற நபர் - தாயை அவதூறாக பேசியதால் வெறிச்செயல்
x
* மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சிக்கபாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ். இவரும் அவரது நண்பர் பசுபதியும் நண்பர்களாக இருந்தனர்.

* இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரீசுக்கும், பசுபதியின் தாய்க்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. 

* அப்போது கிரீஷ், பசுபதியின் தாயை அவதூறாக பேசியதோடு, ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, இன்று காலை  கிரீஷிடம், தாயை ஆபாசமாக திட்டியது பற்றி பசுபதி கேட்டுள்ளார்.

* இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது பசுபதி, கிரீஷின் தலையை கோடரியால் வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட  மலவள்ளி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். 

* பின்னர், கொலை செய்தது பற்றி கூறி, போலீசாரிடம் பசுபதி சரணடைந்துள்ளார். இந்த பயங்கர கொலை சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்