சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - உச்சநீதிமன்றம்.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
x
10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய தடை இல்லை என்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்திற்கு 3 நீதிபதிகள் உடன்பாடு. நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட கருத்து. பெண்களை வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. மேலும் பெண்கள் தங்கள் உரிமைக்காக எல்லா காலங்களிலும் போராடி வருகின்றனர், பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள், பக்தியில் பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நான்கு நீதிபதிகள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை இல்லை என தீர்ப்பளித்தனர். நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும், ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்ற மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளார்.  

* ஐயப்ப பக்தர்கள் தனி மதத்தினர் அல்ல, அவர்களும் இந்து மதத்தினர்தான்.

* பக்தியில் பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது. 

* வழிபாடு என்பது அனைவருக்கும் உள்ள சமமான உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து



சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - வழக்கறிஞர் சாந்தகுமாரி கருத்து 


சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - அர்ஜுன் சம்பத் கருத்து 


சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - நடிகை குட்டி பத்மினி கருத்து 


சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - நடிகர் மயில்சாமி கருத்து 


சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - ரவிக்குமார் கருத்து


சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - வழக்கறிஞர் வீ.கே.பிஜூ கருத்து 


சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - ஆசிர்வாதம் ஆச்சாரி  கருத்து 


சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - ஓவியா, சமூக ஆர்வலர் கருத்து 



Next Story

மேலும் செய்திகள்