"ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை" - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் விளக்கம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விதிகள் தெளிவாக இருப்பதாகவும் , முறைகேட்டுக்கு வாய்ப்பு இல்லை என பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் விளக்கம்
x





பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், நியுயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, ரபேல் ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை எனவும் விதிமுறைகளை மிக தெளிவாக பிரான்ஸ் பின்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ரபேல் ஒப்பந்தமானது இரு நாட்டு அரசுகளுக்கு 
இடையிலானது எனவும் இரண்டு ராணுவங்களுக்கு இடையிலான விரிவான ஒத்துழைப்பு எனவும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அந்த கருத்துகளே தன்னுடையது எனவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் கூறினா​ர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது , தாம் பதவியில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார் ..

Next Story

மேலும் செய்திகள்