புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையின் பங்கு அடுத்த 4 ஆண்டுகளில் 18 சதவீதமாக அதிகரிக்கும்

இயற்கை ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.
புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையின் பங்கு அடுத்த 4 ஆண்டுகளில் 18 சதவீதமாக அதிகரிக்கும்
x
நிலக்கரியை எரிக்காமல், புகையை கக்காமல்,சாம்பலை குவிக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்வதேபசுமை எரிசக்தி ஆகும். சூரியஒளி, காற்று, நீர் போன்ற இயற்கை ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.வரும் 2022-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை ஒரு லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் காற்றாலைகளின் பங்கு 60,000 மெகாவாட்டாக இருக்கும் என்றும், சூரியசக்தி மின் உற்பத்தி திறன் ஒரு லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் பங்களிப்பு கடந்த மார்ச் நிலவரப்படி 7 புள்ளி 8 சதவீதமாக உள்ளது என்றும் இது, வரும் 2022-ல்  18 சதவீதமாக உயரும் என்றும் மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்