பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

அரசு பணிகளில், எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லை என்ற தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
x
அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என கடந்த 2006ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசு பணியில் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உத்தரவை 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற வேண்டிய  அவசியமில்லை எனவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்