ரூ.16.6 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு

ஹைதராபாத்தில, பாலாப்பூர் கணேஷ் லட்டு, 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ரூ.16.6 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு
x
* ஹைதராபாத்தில, பாலாப்பூர் கணேஷ் லட்டு, 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. 

* விநாயகர் சதுர்த்திக்கு படைக்கப்படும் இந்த லட்டு, இங்கு பிரபலமானது. இந்த லட்டுவை, பாலாப்பூர் ஆர்ய வைசிய சங்கத்தைச் சேர்ந்த சீனிவாஸ் குப்தா என்பவர் ஏலம் எடுத்தார். 

* 21 கிலோ எடை கொண்ட இந்த லட்டு, விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்கப்பட்டு, சிலை கரைக்கப்படும் நாள் அன்று ஏலம் விடப்படுகிறது.

* ஏலம் எடுப்பவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியும், செல்வமும், உடல்நலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த லட்டுவை ஏலம் எடுக்க பலர் போட்டி போடுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்