மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் - 5 மாநிலங்கள் எதிர்ப்பு

நாடு முழுவதும், சுமார் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டமான, ஆயுஷ்மன் பாரத் திட்டத்தை 5 மாநிலங்கள் எதிர்த்துள்ளன.
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் - 5 மாநிலங்கள் எதிர்ப்பு
x
பிரதமர் நரேந்திர மோடி-யால்  துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டம் மூலம் குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். 1,300 வகையான நோய்களுக்கு இதன் கீழ் சிகிசை பெறலாம். இத்திட்டத்திற்கான செலவில் 40 சதவீதத்தை மத்திய அரசும், 60 சதவீதத்தை 
மாநில அரசுகளும் ஏற்கும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இதனுடன் இணைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களில் உள்ள சுமார் 2.85 கோடி பேர்களுக்கு, இனி ஆண்டிற்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு கிடைக்கும். 

தெலுங்கான, ஒரிசா, டெல்லி, பஞ்சாப் மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநிலங்கள் இத்திட்டத்தில் சேரவில்லை. 5 லட்ச ரூபாய் காப்பீட்டுக்கு, 1,110 ரூபாய் ஆண்டு பிரிமியம் போதுமா என்று கேரள நிதியமைச்சர் ஐசக் கேட்டுள்ளார். இதற்கு முன்பு இருந்த திட்டத்தில்,30,000 ரூபாய் காப்பீட்டுக்கு 1,250 ரூபாய் பிரிமியம் இருந்ததை ஒப்பிட்டு, இந்த சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார். தெலுங்கான மாநிலத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 70 சதவீத மக்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. ஆனால் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தில், தெலுங்கானாவில் 80 லட்சம் மக்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு கிடைக்கும்  என்பதால் இதில் சேரவில்லை என்று தெலுங்கான அரசு கூறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்