59 பேரை பலி கொண்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் - 2 பேருக்கு ஆயுள் தண்டனை

59 பேரை பலிக் கொண்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
59 பேரை பலி கொண்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் - 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் அந்த ரயிலில் பயணம் செய்த 59 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ரயில் எரிப்பு 
வழக்கை விசாரித்த அகமதாபாத் நீதிமன்றம் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. மேல் முறையீட்டின்போது, 11 பேரின் தூக்கு தண்டணையை அம்மாநில உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.இந்நிலையில்,  ரயில் எரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த 13 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், பரூக் பனா, இம்ரான் ஷேரு ஆகிய இருவருக்கும் அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 3 பேரை விடுவிப்பதாக, நீதிபதி எம்.சி.வோரா தீர்ப்பளித்தார். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்னும் 8 பேர் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்