இந்தியாவில் மொபைல் வங்கி பணப்பரிமாற்றம் ஒரே ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது

ஒரே ஆண்டுக்குள் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக மொபைல் வங்கி மூலம் பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொபைல் வங்கி பணப்பரிமாற்றம் ஒரே ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
x
* 2017 அக்டோபர் முதல்  2018 ஜூன் வரை 30 கோடி பணப் பரிமாற்றங்கள்  நடந்துள்ளன. இது, முந்தைய ஆண்டுகளை விட இரண்டு மடங்காகும்.

* இதுபோல, ஒரே ஆண்டுக்குள், 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக மொபைல் வங்கி மூலம் பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

* பணப்பரிமாற்ற செயலிகள் , பே டிஎம், ஆன்லைன் வங்கி என மின்னணு பரிவர்த்தனை வாய்ப்புகள் அதிகரித்ததால், இது சாத்தியமாகியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . 

* இதில், 4 கோடியே 70 லட்சம் பரிவர்த்தனைகளுடன் பே டிஎம் முதல் இடத்திலும், 4 கோடியே 20 லட்சம் பரிவர்த்தனைகளுடன் பாரத ஸ்டேட் வங்கி இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

* பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த பணப் பரிமாற்றங்களில் 36 சதவீதம் மின்னனு பரிவர்த்தனையில் நடைபெறுவதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்