3,734 முகாம்களில் 8 லட்சத்து 46, 680 பேர் தஞ்சம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

இதுவரை எதிர்கொண்டிராத இயற்கைப் பேரிடரால் கேரளாவில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
3,734 முகாம்களில் 8 லட்சத்து 46, 680 பேர் தஞ்சம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
x
* திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வெள்ளத்தால் வீடுகளில் சிக்கித் தவித்தவர்கள் மீட்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 734 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* மொத்தம் 8 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

* தவிர, முகாம்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கி இருப்பவர்களுக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.தலா ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 6 சுகாதார ஆய்வாளர்கள் மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருவதாகவும், வெள்ள நீர் வடிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

10 கோடி ரூபாய் அளித்துள்ள மேற்குவங்கம் போன்ற மாநிலங்களின் பேருதவியால் துயரத்திலிருந்து விரைவில் மீள முடியும் என்று நம்புவதாகவும், தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி வேறுபாடின்றி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேவையான உதவிகளை செய்து வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் முயற்சி ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்